HOME  l  PROFILE l  HISTORY  l  STAFF l  GALLERY l  CONTACT US

Athletics:

  கோட்ட மட்ட பாடசாலைகளிற்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டியில் 15,17 வயதுப்பிரிவு ஆண்கள் அணியினர் முதலாம் இடத்தினைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். பயிற்றுனராக இ.காண்டீபன் செயற்பட்டு வருகின்றார்.                                                 26.01.2014  
 

 
மீண்டும் மிடுக்காகத்  தொடங்கும் அருணோதயக்கல்லூரியின் உதைபந்தாட்டம்.  
 

எமது கல்லூரிப் பழையமாணவர்கள் நலன்விரும்பிகள்,புலம்பெயர்ந்த பழையமாணவர்களின் வேணடுகோளிற்கிணங்கவும் அவர்களின் ஊக்குவிப்பிற்கேற்பவும் நான்கு வருட இடைவெளியின் பின் அதிபர், விளையாட்டுத்துறை முதல்வரின் முயற்சியினால் 15வயதின் கீழ் உதைபந்தாட்ட அணி தொடங்கப்பட்டு கோட்ட, வலய , மாவட்ட மட்டப்போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று மாகாணமட்டப்போட்டியிலும் இறுதிவரை வெற்றிகளைப்பெற்று இறுதிப் போட்டியில் 1.0 என்ற கோல்கணக்கில் புனித ஹென்றியரசர் கல்லூரியிடம் தோல்வி கண்டு 2ம் இடத்தினைப்பெற்றுக்கொண்டது. பொறுப்பாசிரியராக சுகுணேந்திரன் அவர்களும் பயிற்றுனர்களாக பிரதீபன் அவர்களும் ரஜிதன் அவர்களும் கடமையாற்றி இவ் வெற்றிகளுக்கு அரும் பங்காற்றினர். பல வருடங்களாக பின்னடைவுகண்டு வந்த அருணோதயாவின் உதைபந்தாட்டம் மீண்டும் தொடங்கும் மிடுக்காக எழுச்சி கண்டுள்ளது. இவ் உதைபந்தாட்ட அணி எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள தேசிய மட்டப்போட்டியிலும் பங்கு பற்றி வெற்றிகளைப் பெற வாழ்த்துக்கள். அருணோதயாவின் உதைபந்தாட்டம் வளர்ச்சி பெற உதவியவர்களுக்கும் சீருடை,உதைபந்துகளை பெற்றுத்தந்த புலம்பெயர்ந்த பழைய மாணவர்களுக்கும் பயிற்சியளித்த பழைய மாணவர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
 

உதைபந்தாட்ட வளர்ச்சிக்காகவும் விளையாட்டுவீரர்களுக்கு போசாக்குணவை வழங்குவதற்காகவும் நிதியுதவியை பழையமாணவரிடம் எதிர்பார்க்கின்றோம்.

 

 
 

 
 

 

  • 2010 ம்ஆண்டு இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மெய்வல்லுனர் போட்டிகளில் தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப்பதக்கத்தினைப் பெற்ற மாணவர்கள்

                                இ.ஜக்சனா(வெள்ளி),  மு.பவித்திரா(தங்கம்), ச.தனுசா(தங்கம்),  அ.றொசான்(தங்கம்)
 

 

  •  2009 அகில இலங்கை பாடசாலைகளுக்கான விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுடன் ஆசிரியர்கள்.

 

 

  •  2008 ஆம் ஆண்டு தேசிய மட்டத்தில் கால் இறுதிவரை முன்னேறிய 19 வயதுப் பிரிவு   உதைபந்தாட்ட அணி

 

 

 

  • தேசிய மட்டப்போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர் மற்றும் அதிபர், ஆசிரியர்கள்

 

 

  • 2008 ஆம் ஆண்டில் தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்ற க்ல்லூரி மாணவி ச.தனுசா மற்றும் வெண்கலப்பதக்கம் பெற்ற கோ.கணாதீபன் ஆகியோர், விளையாட்டு முதல்வர் சி.சுபாஸ்கரன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பாகீஸ்வரன் ஆகியோருடன்

                    J/Arunodaya College,  Alaveddy                                   T.P  : .0094-602214007                                     E-Mail  : arunodaja@gmail.com