HOME  l   PROFILE l   HISTORY  l   STAFF l  GALLERY l  CONTACT US
     
  தேவை...          (17.09.2010)           

கல்லூரியின் வளப் பற்றாக்குறைகளை நிவிர்த்தி செய்வதற்கு  அருணோதயக்கல்லூரி பழைய மாணவர்களிடம் உதவிகளை எதிர்பார்க்கின்றது.  (21.07.2010)


அருணோதயக்கல்லூரி தற்போது கல்வி, விளையாட்டுத்துறைகளில் துரித வளர்ச்சிகண்டு வருகின்றது. 1960களில் இருந்த விஞ்ஞான கணிதப்பிரிவுகள் பல்வேறு காரணங்களால் 1980களில் எமது பாடசாலையில் இல்லாமல் போனமை அளவையூரினைச் சேர்ந்த பல்வேறு மக்களையும் பழைய மாணவர்களையும் கவலையில் ஆழ்த்தியது. முன்னர் எமது பாடசாலையில் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்ற பல மாணவர்கள் வைத்தியர்களாக எமது நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் சேவையாற்றுவது குறிப்பிடத்தக்கது. எனினும் தற்போது கல்லூரியின் எழுச்சி காரணமாக பாடசாலை மாணவரின் தொகை பெரிதும் அதிகரித்துள்ளது. இதனால் கல்லூரியில் அடுத்த வருடம் (2011) விஞ்ஞான கணிதப் பிரிவினை பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளை ஏற்று ஆரம்பிப்பதற்கு கல்லூரி நிர்வாகம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
 

கல்லூரித்தாயிற்கு பல்வேறு வளப் பற்றாக்குறைகள் இருப்பதனால் அக்குறைகளை கல்லூரி தீர்த்து வெற்றிப் பயணத்தினை மேற்கொண்டு வீறுநடை போடுவதற்காக அருணோதயாவின் புலம்பெயர்ந்து மேற்கத்தய நாடுகளில் வசிக்கும் பழையமாணவர்களிடம் உதவிகளை எதிர்பார்க்கின்றது. எமது பழையமாணவர்களின் தொடர்பினை அருணோதயக்கல்லூரி எதிர்பார்த்து நிற்கின்றது. எமது பாடசாலை பழையமாணவர்கள் கல்லூரிக்கு உதவக் கூடிய வசதியினைக்கொண்டிருப்பதும் அதற்கான மனப்பாங்கினை உடையவர்களாகவிருப்பதும் எமது வரப்பிரசாதமாகக் கருதுகின்றோம்.

  • விளையாட்டு,சுற்றுலா நிகழ்வுகளிற்கு மாணவரை அழைத்துச்செல்ல பெருந் தொகைப் பணத்தினை கல்லூரியும் மாணவரும் செலவிட வேண்டி உள்ளது. எனவே வாகனம் ஒன்றினை பெற்றுத்தந்தால் சிறப்பானதாயிருக்கும் (2.5மில்லியன்).

  • சோலை போன்று உள்ள எமது கல்லூரி வளவிற்குள் மாடுகள் வந்து பூங்கன்றுகளை அழிப்பதனால் கல்லூரியின் பின் பகுதிக்கு மதில் கட்ட வேண்டி இருப்பதனால் பெருமளவு நிதி தேவைப்படுகின்றது. (ரூ.5இலட்சம்)

  • எமது கணினி அறையில் கணனிகள் பற்றாக்குறை காரணமாக ஒரு வகுப்பின் எல்லா மாணவரும் ஒரே நேரத்தில் கணினியைப்பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. குறைந்தது 10 கணினிகளாவது தேவைப்படுகின்றது.

  • விளையாட்டுத்துறை பயிற்சி பெறும் மாணவர்களின் சத்துணவு வழங்க மாதாந்தம் ரூ5000 வீதம் வருடமொன்றிற்கு ரூ60000 தேவைப்படுகின்றது. இதற்கான பண உதவியினை பழைய மாணவரிடம் எதிர்பார்க்கின்றோம்.

  • கல்வித்துறையில், விளையாட்டுத்துறையில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்ற மாணவர்களுக்கு பெறுமதியான பரிசில்களை எமது பழையமாணவர்களிடம் எதிர்பார்க்கின்றோம். இதனை அவர்கள் நினைவுப் பரிசில்களாக வழங்கலாம்.

  • எமது பாடசாலையில் தகவல் தொடர்பாடல் கற்கை நெறியை விருத்தி செய்வதற்காக இணையவசதி அவசியம் தேவைப்படுகின்றது. இதற்கான ADSL இணைப்பிற்காக ரூ30000 செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கான நிதியுதவியை பழைய மாணவர்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.

  • எமது பாடசாலைக்கு ஒரு உள்ளக பிராத்தனை மண்டபம்(Auditorium) இல்லாமை பெருங் குறையாகும். எமது பாடசாலையின் அருணாசல உடையார் மண்டபத்திற்கு மேல் உள்ள மண்டபத்தினை பாடசாலை நிகழ்வுகளுக்கான மண்டபமாக மாற்றுவதற்கும் ஜன்னல்கள் இட்டு மூடிக்கட்டுவதற்கும் சீலிங் அடிப்பதற்குமாக 2மில்லியன் ரூபா தேவைப்படுகின்றது.

  • எமது பாடசாலையின் நுழைவாயில் முகப்பினை அழகாக அமைப்பதற்கு ரூ5இலட்சம் தேவைப்படுகின்றது.

 

இத்தேவைகளை எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கங்களோ அல்லது நலன்விரும்பிகளோ, பழைய மாணவர்களோ கருத்திற்கொண்டு இத்தேவைகள் நிறைவுபெற ஆவன செய்தால் எமது பாடசாலையை வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல உதவியாயிருப்பதுடன் எமது கல்லூரியில் தங்கியிருக்கும் அளவையூர் சமூகத்திற்கும் அது பேருதவியாயிருக்கும்.

அருணோதயக்கல்லூரி
அளவெட்டி

 

உடனடித்தேவை (16.03.2010)


இடம்பெயர்ந்தோர் முகாம்களிலிருந்து (வன்னியைச் சேர்ந்த) 150 பிள்ளைகள் தற்போது எமது பாடசாலையில் கல்வி கற்கின்றனர். இவர்களில் பலர் ஊனமுற்றுள்ளனர். 35 மாணவர்கள் தமது பெற்றோரை இழந்துள்ளனர். எனவே இவர்களுக்கான பல்வேறு உதவிகளை அருணோதயக் கல்லூரிச் சமூகம் புலம்பெயர்ந்து வெளி நாடுகளிலிருக்கும் பழைய மாணவர்கள், நலன் விரும்பிகளிடமிருந்து எதிர்பார்க்கின்றது.

நன்றி
நிர்வாகம். அளவெட்டி அருணோதயக்கல்லூரி

எமது பாடசாலை பல வருடங்களாக தேசியமட்டப்போட்டியில் பங்குபற்றிக்கொண்டிருந்தாலும் பல்வேறு பௌதீக வளப்பற்றாக்குறைகளை எதிர் நோக்கிய வண்ணம் உள்ளது.

  • போதிய தரமான விளையாட்டு உபகரணங்களின்மை

  • எமது பாடசாலையில் மிகவும் வறிய நிலையிலுள்ள குடும்பங்களைச்சேர்ந்த மாணவர்களே கற்கின்றனர். விளையாட்டுப்பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களின் போசாக்குமட்டம் மிகவும் கீழ் நிலையில் உள்ளது. இவர்களுக்கான போசாக்கினையும் பாடசாலையே வழங்க வேண்டி உள்ளது.

  • மாகாணமட்ட,தேசியமட்டப்போட்டிகளில் கலந்துகொள்ளச்செல்லும் போது இவர்களுக்கான உணவு, போக்குவரத்து, சீருடை, பாதணி, ஆகியவற்றுக்கான செலவுகள் பாடசாலை மற்றும் மாணவர்களின் பொருளாதாரநிலைக்கு அப்பாற்பட்டதாக காணப்படுகின்றது. இதற்கான நிதி வசதியை பழைய மாணவர்கள், பாடசாலை நலன் விரும்பிகளிடம் கோரிநிற்கின்றோம்.

  • தென்னிலங்கையிலுள்ள பிரபல பாடசாலைகளும் பிரமிக்கத்தக்க வகையில் எமது பாடசாலையின் விளையாட்டுத்துறை வளர்ச்சி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் வளங்களினடிப்படையில் எமது பாடசாலையில் குறிப்பிடத்தக்க நவீன தொழினுட்ப வசதிகளைக் கொண்ட உடல் வலுவூட்டும் உபகரணத் தொகுதிகளோ, கட்டிட வசதிகளோ, மெத்தைத் தொகுதிகளோ, உயர்ரக Pole, crossbar, upraist, போன்றனவோ இல்லை. இவ்வளவு வசதிகளையும் நாம் பெற்றால் வெளிநாடுகளுடன் போட்டியிடும் அளவிற்கு நாம் பயிற்சிகளைப் பெறக் கூடியதாயிருக்கும்.
     

OUR NEEDS

1.Pole vault Pole-  4.6m,150kg

                                3.7m,110kg

                                4.0m,130kg

2. Pole Vault mattress

3. Pole Vault upraise

4. Weight sets& machinery

5. Gymnastic Sets

DONATIONS
 கதிர்காமசேகரம் ஞாபகார்த்த திறந்த வெளிப்பார்வையாளர் அரங்கு  அடிக்கல் நாட்டிவைப்பு

எமது பாடசாலைப் பழையமாணவரும் எமது பாடசாலை உப அதிபர் திருமதி.சா.அமிர்தலிங்கம் அவர்களின் சகோதரருமான Dr.ரவீந்திரன் (கனடா) தனது தந்தையார் ஞாபகர்த்தமாக திறந்தவெளி பார்வையாளர் (Open Stage) அரங்கினை எமது கல்லூரிக்கு அமைத்துக் கொடுக்கின்றார். இதற்கான அடிக்கல்லினை தெல்லிப்பளைக் கோட்டக்கல்விப்பணிப்பாளர் கைலாசநாதன் அவர்கள் நாட்டி வைத்தார். (21.10.2009 காலை10.20மணி).

Dr.ரவீந்திரன் அவர்கட்கு அருணோதயக்கல்லூரிச் சமூகம் தனது நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

                
 

அடிக்கல் நாட்டு விழாவிற்கான பூமிபூசையில் அதிபர் கலந்து கொள்வதைக்காணலாம்.

Rebond Textile  நிறுவனம் தேசியமட்டப்போட்டிகளில் கலந்து கொள்ளச்சென்ற அருணோதயக்கல்லூரி மாணவர்களுக்கு தனது உற்பத்தி T-Shirt  அன்பளிப்பாக வழங்கியது.
அதிபர் ஆசிரியர் மாணவர்கள் அவற்றைப்பெற்றுக்கொள்வதையும் நிறுவன நிர்வாகிகள் அருகில் நிற்பதையும் படங்களில் காணலாம்
J/Arunodaya College,  Alaveddy                                     T.P  : .0094-212241072                                   E-Mail  : arunodaja@gmail.com