LONDON OSA...
 
அருணோதயாவின் இன்னிசைமாலை - 2013, அருணோதயாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் (லண்டன்) அநுசரணையுடன்                                                                                                                           (25.09.2013)
தென்னிந்தியத் திரைப்படப் பாடகர் படையப்பா புகழ் ஸ்ரீராம் மற்றும் பலர் பங்குபற்றும் இசை நிகழ்ச்சி...

  (05.10.2012)

அருணோதயக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் லண்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்ற அருணோதயம் இசை நிகழ்வு எல்லோரும் பாராட்டத்தக்க விதத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வின் மூலம் கல்லூரி வளர்ச்சிக்கு பெருமளவு நிதி சேகரிக்கப்பட்டதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். திருமதி.நாகேஸ்வரி கணேஸ்வரன் அவர்கள் முதலில் மங்களவிளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அவரைத் தொடர்ந்து அளவெட்டி மக்கள் சங்கத் தலைவர் திருக.ஜெயவரதன் செயலாளர் திருமதி சுசி உட்பட்ட ஊர் உறவுகள் மங்கள விளக்கினை ஏற்றினர். அருணோதயக்கல்லூரி பழைய மாணவர் சங்க லண்டன் வைத்தியர் உமைபாலன் ஒருபோதும் லண்டன் கண்டிராத அளவில் மிக இனிமையான பாடல் தெரிவுகளுடன் தென்னிந்தியப்பாடகர் மதுபால கிருஸ்ணணின் இசைநிகழ்வு இடம்பெற்றதாக நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். நிகழ்வு சிறப்பதற்காக பல்வேறு வழிகளிலும் உழைத்த அனைவருக்கும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் சார்பில் பழைய மாணவர் சங்கத்தின் சர்வதேச இணைப்பாளர் செ.சிறிக்காந்தன் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார். அத்துடன் இத்தகைய அருணோதயம் இசை நிகழ்வு எதிர்வரும் ஜனவரி மாதம் கொழும்பிலும் அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் நடாத்த திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மீண்டும் லண்டனில் அருணோதயம்                                                                                                                                     (12.05.2012)
அருணோதயக் கல்லூரி லண்டன் பழைய மாணவர் சங்கம் கல்லூரி வளர்ச்சிக்காக வருடம் தோறும் நடாத்த திட்டமிட்ட அருணோதயம் கலை நிகழ்வு எதிர்வரும் செப்ரெம்பர் 29 ம் திகதி அதே மண்டபத்தில் மீண்டும் தென்னிந்திய பாடகர் மதுபாலக்கிருஸ்ணண் மற்றும் பலர் கலந்து கொள்ளும் இசை மழையில
நனையக் காத்திருங்கள்...

அருணோதயக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் லண்டன் கிளையினர் கல்லூரியின் கட்டட வளர்ச்சி நிதிக்காக  டிசம்பர் மாதம் 4ம் திகதி லண்டனில் கலை நிகழ்வொன்றை நடாத்தி பாடசாலையின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளனர்.

 

Message from the President

Dear Arunodayans and well wishers,

It is with immense pleasure I welcome you all to our ‘InnisaiMaalai-2011’. This is being organised by us primarily for the purpose of raising funds for the most essential development projects of our ‘Alma Mater’.Our old college…

இணைப்பு...

 

    

 
 
Old News ...
 

அருணோதயக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் லண்டன் கிளையினர் கல்லூரியின் கட்டட வளர்ச்சி நிதிக்காக கலை நிகழ்வொன்றை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ம் திகதி லண்டனில் நடாத்தவுள்ளனர்.  

 

 

 

இந் நிகழ்வில் தென்னிந்திய முன்னணி பாடகர் உன்னி மேனன், Junior super singer அல்கா அஜித், சீர்காழி புகழ் இசைமணி இராஜராஜசோழன்(மலேசியா) மற்றும் கவிஞர் பிறைசூடன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். விளையாட்டுத் துறையில் பல தேசியச் சாதனைகளைத் தனதாக்கி அளவெட்டி மண்ணுக்கு புகழ் சேர்த்து வரும் அருணோதயக் கல்லூரி கல்விச் சாதனைகளிலும் கனதியான பதிவுகளைத் தனதாக்கி வருகின்றது. ஐந்தாம் தர புலமைப் பரிசில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளிலும் பல வெற்றிகளையும் சிறந்த பெறுபேறுகளையும் பெற்று வரும் கல்லூரியின் மாணவர்கள் பாராட்டுக்குரியவர்கள். அண்மையில் உயர்தர கணித விஞ்ஞானப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு 1AB பாடசாலையாக தரமுயர்த்தப் பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இருந்தும் கல்லூரி பல பௌதிக வளப் பற்றாக் குறைகளைச் எதிர்கொண்டு நிற்கின்றது. அதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் லண்டன் வாழ் பழைய மாணவர்கள் கலை நிகழ்வொன்றை நடாத்தி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளனர். இந் நிகழ்வில் பெறப்படும் நிதி மூலம் கல்லூரியில் புதிய கட்டடத் தொகுதியொன்று அமைக்கப்படவுள்ளது. எனவே இந் நிகழ்வு வெற்றி பெற கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அத்துடன் அளவை உறவுகள் அனைவரினதும் ஒத்துழைப்பை நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த கலைநிகழ்வு தொடர்பான அழைப்பை எமது உறவுகள் அனைவரும் தங்களால் இயன்றளவு மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதுடன் இந் நிகழ்வு ஏற்பாடுகளில் இணைந்து பணியாற்ற விரும்பும் பழைய மாணவர்கள் இச் செய்திக்குறிப்பின் கீழான கருத்துப் பெட்டியில் தங்கள் பெயர் முகவரி தொலைபேசி இலக்கம் மின்னஞ்சல் முகவரி என்பனவற்றைக் குறிப்பிடவும். இந் நிகழ்வு தொடர்பான மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ள........
Dr. T. Umaipalan        00447818464000
P. Kaneswaran          00442089495331

T. Sritharan                 00442086470532

P. Kumareson            00442083362068

S. Kanthan                  00447435118196

                    J/Arunodaya College,  Alaveddy                                   T.P  : .0094-212241072                                   E-Mail  : arunodaja@gmail.com